என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மனைவி கண்டிப்பு"
பாகூர்:
தவளக்குப்பம் அருகே ஆண்டியார்பாளையம் காலனியை சேர்ந்தவர் வீரப்பன் (வயது57). பிளம்பராக வேலைசெய்து வந்தார். இவருக்கு ஜெயா என்ற மனைவியும் 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணமாகி விட்ட நிலையில் ஒரு மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இதற்கிடையே வீரப்பன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இதனை அவரது மனைவி ஜெயா கண்டிக்கும் போதெல்லாம் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி வந்தார்.
இந்த நிலையில் நேற்றும் வீரப்பன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி ஜெயா மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இதுபோன்று வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வந்தால் திருமணத்தை எப்படி நடத்துவது என்று கண்டித்தார்.
இதையடுத்து வீரப்பன் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்தார். வழக்கம்போல் கணவர் மிரட்டுவதாக எண்ணி ஜெயா வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். அப்போது திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி வீரப்பன் தீவைத்து கொண்டார்.
உடல் முழுவதும் தீபரவியதால் வலியால் வீரப்பன் அலறி துடித்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைத்து வீரப்பனை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வீரப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பாகூர்:
பாகூர் அருகே குடியிருப்பு பாளையத்தை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 52). இவர் கடலூரில் உள்ள ஒரு பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பாத்திமா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
மது குடிக்கும் பழக்கம் உள்ள முகமது உசேன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். அதுபோல் நேற்றும் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி பாத்திமா கண்டித்தார்.
இதனால் மனமுடைந்த முகமது உசேன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நைலான் கயிற்றால் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை அனிதாநகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 53). இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், பிரத்தீஸ் யுமணன் (18) என்ற மகனும், தேவகி (13) என்ற மகளும் உள்ளனர்.
கனகராஜ் முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் வீதியில் பூக்கடை நடத்தி வருகிறார். மகேஸ்வரி திப்புராயப்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று புத்தாண்டையொட்டி மகேஸ்வரி கணவரிடம் மாலை கோவிலுக்கு செல்ல வேண்டும். அதனால் கடையை சீக்கிரம் பூட்டி விடுங்கள் என கூறினார். இதையடுத்து மகேஸ்வரியும், தனது குழந்தைகளும் கோவிலுக்கு செல்ல தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் இரவு 8 மணிக்கு கனகராஜ் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் மது அருந்தி இருந்தார்.
இதை கண்ட மகேஸ்வரி புத்தாண்டுக்கு கோவிலுக்கு செல்ல இருக்கும் நேரத்தில் இன்றும் மது குடித்து வந்துள்ளீர்களே? என கணவனை திட்டினார். இதனால் மன வருத்தம் அடைந்த அவர் மேல் மாடிக்கு சென்று படுத்து கொண்டார்.
பின்னர் மகேஸ்வரி குழந்தைகளை மட்டும் அழைத்து கொண்டு பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டார்.
மனைவி திட்டியதால் சோகத்தில் இருந்த கனகராஜ் அங்கு மின் விசிறி கொக்கியில் மனைவியின் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த மனைவி- குழந்தைகள் மேல் மாடிக்கு சென்று பார்த்தனர். அங்கு தூக்கில் தொங்குவதை கண்டு அலறி துடித்தனர்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டது. தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளச்சல்:
குளச்சல் அருகே உள்ள சைமன் காலனியைச் சேர்ந்தவர் மிக்கேல் ஸ்டார்பின் (வயது 35). இவர் மீன் பிடித்தொழில் செய்து வந்தார்.
இவரது மனைவி மேரி மஜோரா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார்.
மிக்கேல் ஸ்டார்பினுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்து வந்தார். அவரது மதுப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் அவர்களுக்குள் தகராறு உருவானது.
இந்தநிலையில் நேற்றும் இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரவு மிக்கேல் ஸ்டார்பின் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றார். நீண்டநேரமாகியும் அவர் கீழே வராததால் அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தொட்டில் கயிறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுபற்றி குளச்சல் போலீசில் மேரிமஜோரா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து மிக்கேல் ஸ்டார்பின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதிபாளையம் மாதேஸ்வரன் நகரை சேர்ந்தவர் குமார் (வயது 36). கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனை பிரியா கண்டித்தார். ஆனால் குமார் மது அருந்துவதை நிறுத்தவில்லை. நேற்றும் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் கோபம் அடைந்த குமார் அருகில் உள்ள அவரது அக்காள் வீட்டிற்கு சென்றார். அக்காள் குடும்பத்தினர் உறவினர் வீட்டில் நடந்த விழாவுக்கு சென்று விட்டனர். அங்கு சென்ற குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோன்று அரியலூர் மாவட்டம் கள்ளக்குடியை சேர்ந்தவர் மதன் (19). இவர் பல்லடம் சின்னக்கரை பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தங்கி கடந்த 6 மாதமாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து வெளியே வந்தார். மீண்டும் மதனை காணவில்லை.
நேற்று கம்பெனியின் சமையல் அறையில் பார்த்தபோது மதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு திருப்பதி பாலாஜி நகரை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 45). பெயிண்டர். இவரது மனைவி ஜானகி (37). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
சசிகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபடுவது வழக்கம்.
அதேபோல் நேற்றும் சசிகுமார் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதனால் அவரது மனைவி வேலைக்கு செல்லாமல் இப்படி மது குடித்து விட்டு வந்தால் பிள்ளைகளை யார் கவனிப்பது? அவர்களது படிப்பு செலவுக்கு என்ன செய்வது? என திட்டினார்.
இதனால் மனவேதனை அடைந்த சசிகுமார் நேற்று மாலை வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே இருந்து மனைவி, மகள்கள் வேகமாக வந்து தீயை அணைத்து புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சசிகுமார் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை 9 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜன், ஏட்டு செஞ்சிவேல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்